டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் , சாலையோரம் கடை வைத்திருப்போரும் சிறிய கடைகள் தொழில்கள் நடத்துவோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
காற்றே இல்லாதது போல மூட்டம் நிலவுவதால் வெட்டவெளியில் சாலைகளில் நாள் முழுவதும் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள இவர்கள் பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்