கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட்காய்ன் போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மிகவும் தீவிரமான பிரச்சினை என்றும் இதனை விரிவாக விவாதித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் முதலீட்டாளர்கள் இழுக்கப்படுகிறார்கள் என்றும் பலர் கடன் கிடைக்கும் என்று ஆசையால் இதற்கு உடன்படுவதாகவும் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார் .
கொரோனாவுக்குப் பின்னர் முதலீட்டு சுழற்சி அதிகரிக்கும்போது, வங்கிகள் முதலீட்டுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.