உலகளவில் புதிய நிறுவனங்கள் அதிகம் விரும்பும் நாடாக, இந்தியா திகழ்கிறது என்று, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற வங்கியியல் மற்றும் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியாவின் அறிவியல்பூர்வ திறனுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நாடு முதலிடம் வகிப்பது நல்லதொரு உதாரணம், என்றும் சக்திகாந்த தாஸ் சுட்டிக்காட்டினார்.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 புள்ளி 5 சதவீதமாக இருக்கும், என ஏற்கனவே ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.