கிரிப்டோகரன்சியை தடுக்க முடியாது ஆனால் அதை ஒழுங்குபடுத்துவது அவசியம் என அது குறித்து விவாதித்த நாடாளுமன்ற நிலைக்குழுவில் பங்கேற்றவர்கள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாளிதழ்கள் மற்றும் டிவிக்களில் கிரிப்டோகரன்சி குறித்த பெரிய விளம்பரங்கள் வெளியாகி வரும் நிலையில், அதன் சாதக பாதங்கள் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா தலைமையில் நடந்த நாடாளுமன்ற நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கிரிப்டோ எக்சேஞ்ச், கிரிப்டோ அசெட்ஸ் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகளை அழைத்து இது குறித்து விளக்கம் பெற நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு செய்துள்ளது.