மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் நாட்டின் முதல் உலகத் தரத்திலான ராணி கமலாபதி ரயில் நிலையத்தை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
மறுசீரமைக்கப்பட்ட இந்த ரயில் நிலையம், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 450 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்டது. இந்த ரயில் நிலையத்தில் விமான நிலையத்தில் இருப்பது போன்ற ஏசி மயமாக்கப்பட்ட ஓய்வறைகள், லிஃப்ட்டுகள், விஐபி சொகுசு அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
இதனை அடுத்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, இந்த ரயில் நிலையத்தில் உள்ளது போன்ற உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளே நாட்டின் பொதுவான நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளதாக தெரிவித்தார்.