கிரிப்டோபைனான்ஸ் செலாவணியின் சாதக பாதகங்கள் குறித்து நிதி அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கிரிப்டோகரன்சி தொடர்பாக வெளியாகும் வெளிப்படைதன்மை அற்ற விளம்பரங்களால் எற்படும் பின்விளைவுகள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறத.
கிரிப்டோகரன்சி குறித்து ரிசர்வ் வங்கி, உள்துறை அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகள், சர்வதேச நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து பெற்ற தகவல்களையும் நாடாளுமன்ற நிலைக்குழு ஆராயும் என எதிர்பார்க்கப்படுகிறது.