உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம், அதைத் தொடர்ந்து நடந்த வன்முறைகள் குறித்து விசாரிக்க வெளிமாநில ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்க உத்தர பிரதேச அரசு சம்மதித்துள்து.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் மாநில போலீசாரின் விசாரணை, பல்வேறு முதல் தகவல் அறிக்கைகளில் உள்ள குழப்பங்கள் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
எனவே இந்த விசாரணையை பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து கண்காணிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், முன்னாள் நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் அல்லது வேறு நீதிபதி இதை கண்காணிக்கலாம் என உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம் இது குறித்த உத்தரவு வரும் 17 ஆம் தேதி பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.