டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்ய உள்ளது.
காற்றுமாசு அதிகரித்துள்ளதால், 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த முடியுமா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதையடுத்து, பள்ளிகளுக்கு ஒருவாரம் விடுமுறை அறிவித்து முதலமைச்சர் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.
அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றவும், கட்டுமானப்பணிகளை நிறுத்தி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தொடர்பான முடிவை டெல்லிஅரசு இன்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளது.