கேரளத்தின் தென்மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதுடன், மலைப்பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை, ஆலப்புழை, கோட்டயம், இடுக்கி ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.