முல்லைப்பெரியாறு அணையில் பேபி அணையை வலுப்படுத்த அனுமதிக்கும்படி கேரள அரசுக்கு மத்திய ஜல்சக்தி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீர்மட்ட அளவுக்குத் தண்ணீரைத் தேக்கும் வகையில் அதன் பேபி அணை எனப்படும் சிற்றணையை வலுப்படுத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக பேபி அணையின் அருகே உள்ள மரங்களை வெட்டக் கேரள அரசிடம் அனுமதி கோரியது. மரங்களை வெட்ட முதலில் அனுமதி அளித்த கேரள அரசு பின்னர் மறுத்தது.
இந்நிலையில் மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் இணைச் செயலர் சஞ்சய் அவஸ்தி, கேரளத் தலைமைச் செயலர் டி.கே.ஜோசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பேபி அணையை வலுப்படுத்தத் தமிழக அரசை அனுமதிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.