திருப்பதியில் நாளை நடைபெறும் 29 வது தென்மண்டல கவுன்சில் மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ,கர்நாடகா, லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய அரசுகளின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
எல்லைப் பிரச்சினைகள், சாலைகள் உள்ளிட்ட உள்கட்டுமானங்கள், தொழிற்சாலைகள், வனப்பாதுகாப்பு, நதிநீர்ப் பங்கீடு, கல்வி, உணவு பாதுகாப்பு, போக்குவரத்து, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட உள்ளன.