ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டில் ஆப்கானின் அண்டை நாடுகளைச் சேர்ந்த இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் பிரதிநிதிகள் சார்பில் வெளியிட்ட கூட்டறிக்கையிலும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தை பாகிஸ்தானும் சீனாவும் புறக்கணித்துள்ளன. ஆப்கான் விவகாரத்தில் மிகவும் தீவிரமான மனிதநேயப் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்ட நிலையில் கூட்டத்தைப் புறக்கணித்த பாகிஸ்தானுக்கு ஆப்கான் மக்கள் மீது உள்ள அலட்சியத்தைத்தான் இந்தப் புறக்கணிப்பு பிரதிபிலிக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.