இந்தியா தனது எல்லையருகில் சாலைகள் அமைப்பது போன்ற உள்கட்டமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்த நிலையில் இந்தியாவின் உள்விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் சாலைகள் , பாலங்கள், மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இது இந்தியாவின் இறையாண்மையைக் காப்பதற்கும் ஒற்றுமையைக் காப்பதற்குமான நடவடிக்கை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா ஆக்ரமித்த பகுதியில் 100 பேர் கொண்ட கிராமத்தை அமைத்திருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.