5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாத வாக்கில் நடத்தப்படும் என தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் முன்னணி ஊடகம் நடத்திய நிகழ்ச்சியில் இதை தெரிவித்த அவர், 5ஜி மற்றும் 6ஜி நெட்வொர்க்கிற்கான ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் அனைத்தும் விரைவில் இந்தியாவிலேயே உருவாக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த துறையில் ஈடுபட்டுள்ள 35 நிறுவனங்களுக்கு அரசு ஏற்கனவே உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில், தொலைத்தொடர்புத் துறை ஒழுங்குமுறைகள் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்படும் என்றார் அவர்.
இது பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டத்தில் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.