தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலையில் காற்றின் மாசு நிலைமை மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.
காற்று மாசு நிலை இன்று அது 382 புள்ளிகள் ஆக பதிவானது. நேரு பார்க், ஜந்தர் மந்தர், பஞ்சசீலம் போன்ற பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பனி மூட்டம் காணப்பட்டதால் நடைபாதை பயிற்சி மேற்கொண்டவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
காட்சி மங்கலாக தெரிந்ததால் வாகன ஓட்டிகளும் அவதிக்கு ஆளாகினர்.