இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, கனடா உள்பட 96 நாடுகளால் ஏற்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளுக்கு உலகளாவிய வரவேற்பு இருப்பதாகவும் அவர் கூறினார், உலக சுகாதார அமைப்பினால் அங்கீகாரம் பெற்றுள்ள 8 தடுப்பூசிகளில் இந்தியாவின் 2 தடுப்பூசிகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாண்டவியா, இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக 109 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.