விவசாயிகள் போராட்டம் ஓராண்டை நிறைவு செய்வதையொட்டி நாடாளுமன்றத்தை குளிர்காலத் தொடரின் போது தினமும் முற்றுகையிட விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
இது தொடர்பாக டெல்லி ஹரியானா எல்லையில் உள்ள சிங்கூவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கத் தலைவர்கள், நவம்பர் 29 முதல் 500 விவசாயிகள் தினமும் நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர்களில் பேரணியாக சென்று அமைதியான முறையில் கட்டுப்பாட்டுடன் போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவித்தனர்.
டெல்லி எல்லையில் விவசாயிகள் பெரும்திரளாக திரண்டு போராட்டத்தை வலுப்படுத்த இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்