தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநில அமைச்சருமான நவாப் மாலிக், 1993 மும்பை தாக்குதல் வழக்கில் தண்டிக்கப்பட்ட சர்தார் ஷா வாலி கான் மற்றும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகீமின் சகோதரி ஆகியோரிடம் இருந்து 2 புள்ளி 8 ஏக்கர் நிலத்தை மிக குறைந்த விலைக்கு வாங்கியதாக பாஜக முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் கூறியுள்ளார்.
கடந்த 2005 முதல் 2019 வரை நவாப் மாலிக்கும் அவரது குடும்பத்தினரும் தங்களது சோலிடஸ் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனம் மூலம் நிழல் உலக நபர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், தாவூத் இப்ராகிம் நாட்டை விட்டு தப்பி சென்ற பிறகு அவரது சகோதரி ஹஸீனா பார்க்கருடன் சேர்ந்து நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும் பட்ணவிஸ் குற்றம்சாட்டி உள்ளார்.