விமர்சனம் செய்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்துவது பாஜக அரசின் உத்தி என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாஜகவின் அரசியல் போட்டியாளர்களை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகள் மூலம் துன்புறுத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக், பாஜக எம்பி வருண் காந்தி ஆகியோரும் தேசத்துரோகிகளா என்று சந்திரசேகர ராவ் கேள்வி எழுப்பினார்.