மும்பைத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத்தின் 6 கூட்டாளிகள் மீதான தண்டனையை பாகிஸ்தானின் லாகூர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கீழ் விசாரணை நீதிமன்றத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்ததாக ஜமாத் உத் தாவா இயக்கத்தின் தலைவர்கள் 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதில் ஆறு தீவிரவாதத் தலைவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டது. ஆனால் இந்த தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த ஹபீஸ் சையத் உள்ளிட்டோர் மீது 41 பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
ஹபீஸ் சையத் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய 6 கூட்டாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.