சீன அதிபர் ஜி ஜின்பிங் அசல் எல்லைக் கோடு பகுதியில் இந்தியாவுடன் மோதலை ஏற்படுத்த திட்டமிட்டதாக அந்நாட்டு அரசு ஊடகமான Xinhua தெரிவித்துள்ளது. இந்தியா சீனா இடையே கிழக்கு லடாக் பகுதியின் அசல் எல்லைக்கோடு பகுதியில் நிகழ்ந்து வரும் மோதல் சீன அதிபரின் தனிப்பட்ட தலையீட்டின் காரணமாக திட்டமிடப்பட்டதாகவும்,இந்தியாவுடன் மோதலை ஏற்படுத்தி எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜி ஜின்பிங் நடவடிக்கை எடுத்ததாகவும் சீனாவின் அதிகாரப்பூர்வமான அரசு ஊடகத்தில் முதன்முறையாக ஒப்புதல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பல முறை சீனா திட்டமிட்டு எல்லைப் பிரச்சினையை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியிருந்தது. இதனை சீனா மறுத்து வந்தது. முதன் முறையாக அதிகாரப்பூர்வமான சீன அரசு ஊடகம் வாயிலாக இந்தியாவின் குற்றச்சாட்டு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில், அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா திட்டமிட்டு ஊடுருவல் செய்து வருவதாக விமர்சிக்கப்பட்டிருந்தது.