கேரள மாநிலம் கோழிக்கோட்டில், கொச்சி சர்வதேச விமான நிலைய நிறுவனம் சார்பில் கட்டப்பட்டிருக்கும் ஹைட்ரோ எலக்ட்ரிக் மின் உற்பத்தி திட்டத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
ஆண்டுக்கு இத்திட்டம் மூலம் 14 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆரிப்பாரா பகுதியில் கட்டப்படும் இந்த நீர் மின் நிலையத்தின் மின்சாரம் முழுவதும் விமான நிலையப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும்.
இருவளஞ்சி ஆற்றின் நீரால் 5 ஏக்கர் பரப்பளவிலான நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் .இதற்கான திட்டமதிப்பீடு சுமார் 52 கோடி ரூபாயாகும்.