பிரதமர் மோடியின் ராணுவ தளவாட உற்பத்தித் திட்டம், மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், முழு உதவியை வழங்குவோம் என பிரான்ஸ் உறுதி அளித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும், பிரான்ஸ் அதிபரின் ராஜீய ஆலோசகரான இம்மானுவல் போன்-னுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இந்த உறுதி அளிக்கப்பட்டது.
நவீன ராணுவ தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்க பிரான்ஸ் முன்வந்துள்ளதாக பாரிசில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது. வருடாந்திர இந்திய-பிரான்ஸ் ராணுவ பேச்சுவார்த்தைக்காக பாரிஸ் சென்றுள்ள அஜித் தோவல், அந்நாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களையும் சந்தித்தார்.
அப்போது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் இரு நாடுகளும் உறுதி எடுத்துக் கொண்டன.