அருணாசலப் பிரதேசத்திற்கு அருகே, எல்லைத் தகராறு உள்ள பகுதியில் 100 வீடுகள் கொண்ட குடியிருப்பைச் சீனா கட்டியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அருணாசலப் பிரதேசத்துக்கும், திபெத் தன்னாட்சி மண்டலத்துக்கு இடைப்பட்ட பகுதி யாருக்குச் சொந்தம் என்பதில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தகராறு நீடிக்கிறது.
இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை அளித்துள்ள ஆண்டறிக்கையில் சீனாவின் ராணுவ மற்றும் பாதுகாப்பு மேம்பாடு பற்றிக் குறிப்பிட்டுள்ளது. அதில் அருணாசலப் பிரதேசத்தில் எல்லைத் தகராறுள்ள பகுதியில் சீனா 100 வீடுகள் கொண்ட குடியிருப்பைக் கட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.