மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
கடந்த மாதம் மாரடைப்பால் புனித் ராஜ்குமார் மரணமடைந்த நிலையில், அவரது உடல் பெங்களூரு கண்டீரவா ஸ்டூடியோவில் அடக்கம் செய்யப்பட்டது. இதனை அடுத்து அவரது நினைவிடத்தில் திரையுலகினர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த சூர்யா, ஏழை எளிய மக்களுக்கு புனித் ராஜ்குமார் நிறைய உதவிகளை செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பெங்களூருவில் உள்ள புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்ற சூர்யா, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.