வரும் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
எரியாற்றல் துறை வல்லுநர் நரேந்திர தனேஜா அளித்த பேட்டியில், இந்தியாவின் எண்ணெய்ப் பயன்பாட்டில் 86 விழுக்காடு இறக்குமதி செய்யப்படுவதையும், எண்ணெய் விலை நிர்ணயம் அரசின் கையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலையைக் கட்டுப்பாட்டில் இருந்து அரசு விடுவித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். பன்னாட்டுச் சந்தையில் எண்ணெய் விலை உயர்வதற்கு கொரோனா தொற்று ஒரு பெரிய காரணியாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தேவை மற்றும் வழங்கலில் உள்ள சமனற்ற நிலை, எண்ணெய்த் துறையில் புதிய முதலீடுகள் இல்லாதது ஆகியவற்றால் 2023ஆம் ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை நூறு டாலராக உயரும் என்றும் தெரிவித்துள்ளார்.