டெல்லியில் நேற்று தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த போதும் உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்ட மக்கள் பட்டாசுகளை வெடித்து தீபாவளியைக் கொண்டாடினர்.
இதனால் காற்றில் மாசு கூடியது .மக்கள் மூச்சுவிடத் திணறும் வகையில் எங்கும் புகை மண்டலம் சூழ்ந்தது. பலருக்குக் கண் எரிச்சல், தொண்டை வலி இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.
டெல்லியின் மாசுநிலை இதனால் தீவிரம் அடைந்து மிகவும் மோசம் அடைந்தது. அதிகாலை நிலவரப்படி மாசு நிலை 655 புள்ளிகாகப் பதிவானது. 500 புள்ளிகளைத் தாண்டும் போது மாசு நிலை மிகவும் தீவிரமானதாகக் கருதப்படுகிறது. இந்த நிலை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது..