அயோத்தியில் தீபாவளித்திருநாள் கொண்டாட்டத்தில் ராமர், சீதை, லட்சுமணன் வேடமிட்டுள்ள கலைஞர்களுக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மாலை அணிவித்து வழிபட்டார்.
அயோத்தியில் உத்தரப்பிரதேச அரசு சார்பில் தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க ராமர், சீதை, லட்சுமணன் வேடமிட்டுள்ள கலைஞர்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மாலை அணிவித்தார்.
அதன்பின் அவர்கள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஏறி விழா நடைபெறும் மேடைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
வியட்நாம், கென்யா, டிரினிடாட் டொபக்கோ ஆகிய நாடுகளின் தூதர்களும் ராமர், சீதை, லட்சுமணர் வேட்மிட்ட கலைஞர்களுக்கு வெற்றித் திலகமிட்டனர்.