அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் பத்தாயிரம் மின் வாகன சார்ஜ் செய்யும் நிலையங்கள் அமைக்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய அந்நிறுவன தலைவர் எஸ்.எம்.வைத்யா, ஓராண்டில் சுமார் இரண்டாயிரம் சார்ஜ் செய்யும் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அடுத்த 2 ஆண்டுகளில் கூடுதலாக எட்டாயிரம் நிலையங்கள் நிறுவப்படும் என்றும் தெரிவித்தார்.
நாட்டில் மின் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளில் ஈடுபட்டு வரும் நிலையில், டாடா நிறுவனம் அண்மையில் நாடு முழுவதும் 1,000 மின் வாகன சார்ஜிங் மையங்களை நிறுவியது.