நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தை பார்வையிட ரசிகர்களுக்கு இன்று முதல் அனுமதியளிக்கப்படுகிறது.
மாரடைப்பு காரணமாக கடந்த 29ஆம் தேதி உயிரிழந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல், கடந்த ஞாயிற்றுக்கிழமை கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது தந்தை ராஜ்குமாரின் நினைவிடத்தின் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அங்கு அவரது மனைவி, மகள்கள் உள்ளிட்ட குடும்பத்தினர், 5 ஆம் நாள் சடங்குகளை செய்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று முதல் புனித் ராஜ்குமார் நினைவிடத்தை ரசிகர்கள் பார்வையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.