நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
டெல்லியில் பேசிய அவர், பிரதமர் மோடி அரசாங்கத்தின் ஏழாண்டு காலத்தில் இந்தியாவில் தொழில்கள் செழித்து வளர வலுவான பொருளாதார அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
கொரோனா பேரிடர் காரணமாக இரண்டு ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் தடுமாற்றம் இருந்த தாகவும் தெரிவித்தார்.