12 இலகுரக ஹெலிகாப்டர்கள் உட்பட 7,965 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை வாங்குவதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் கூட்டத்தில் இந்த கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்களை வாங்கவும், கடற்படை போர்க்கப்பல்களின் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து உபகரணங்களை வாங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக்கில் சீனாவுடன் எல்லைப்பிரச்சனை நீடித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.