2070-ஆம் ஆண்டிற்குள் இந்தியா கார்பன் உமிழ்வு இல்லாத நாடாக மாறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பேசிய பிரதமர் மோடி, சீனாவைவிட 10 ஆண்டுகளுக்கு முன்பாகவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை விட 20 ஆண்டுகளுக்கு முன்பாகவும் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறினார்.
காலநிலை மாற்றத்தை கையாள இந்தியா 5 உறுதிமொழிகள் கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், 2030-ஆம் ஆண்டுக்குள் புதைபடிவமற்ற ஆற்றல் திறனை 500 ஜிகாவாட்டாக எட்டவும், ஆற்றல் தேவைகளில் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இருந்து பெறவும் இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார்.
2030-க்குள் கார்பன் உமிழ்வை ஒரு பில்லியன் டன் அளவில் குறைக்கவும், பொருளாதாரத்தில் கார்பன் பங்களிப்பை 45 சதவீதமாக குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
பருவநிலை மாற்றங்கள் குறித்து கட்டுரைகள் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.