வெறும் வாட்ஸ் ஆப் உரையாடல்களை போதைப் பொருள் சப்ளை செய்ததற்கான ஆதாரமாக கருதக்கூடாது என மும்பை சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் சிக்கியது தொடர்பான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானுக்கும் அவரது நண்பர் ஆர்பாஸ் மெர்சன்டிற்கும் போதைப்பொருள் சப்ளை செய்ததாக புகாரில் கைதான ஆசித் குமார் என்பவர் ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணை சனிக்கிழமை நடைபெற்றது.
அதில், ஆர்யன் கானுடனான வாட்ஸ் ஆப் உரையாடலை தவிர ஆசித் மீதான புகாரை நிரூபிக்க எந்தவித ஆதாரமும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், ஆசித் கான் போதைப்பொருள் சப்ளை செய்தாரா என்பதை வாட்ஸ்அப் உரையாடல்களை வைத்து மட்டும் கூறமுடியாது என தெரிவித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கியது.