GST வருவாய் குறித்த புள்ளி விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அக்டோபர் மாதத்தில் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 127 கோடி GSTவரி வருவாய் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தைவிட 24 விழுக்காடு அதிகமாகும். அதேபோல் GST முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை உள்ள மாதங்களில் இது இரண்டாவது பெரிய தொகையாகும்.
2021 ஏப்ரல் மாதத்தில் ஒரு இலட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாயாகப் பெறப்பட்டதே இதுவரை உள்ளவற்றில் அதிகமாகும்.