குஜராத்தின் ராஜ்கோட்டைச் சேர்ந்த தொழில்முனைவர் ஒருவர் வெடிகளின் வடிவத்தில் அகல் விளக்குகளைத் தயாரித்துச் சந்தைக்கு அனுப்பி வருகிறார்.
ஒளிரும் வகை வெடிகளால் காற்று மாசுபாடும், அதிக ஓசையுடன் வெடிக்கும் வெடிகளால் ஒலி மாசுபாடும் ஏற்படுகின்றன. இந்நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஹீனாள் ராமானுஜ் என்கிற பெண், வெடிகளின் வடிவத்திலேயே அகல் விளக்குகளை உருவாக்கியுள்ளார்.
தீபாவளி ஒளி விளக்குகளால் கொண்டாட வேண்டும் என்றும், முடிந்தவரை வெடிகள் கொளுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.