மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க போதிய நிதியில்லாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
ஊதியங்கள் தாமதமாக்கப்பட்ட போதும் தொழிலாளர்கள் பணியைத் தொடர்ந்து செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் 21 மாநிலங்களில் சிவப்பு நிற எச்சரிக்கை நிலை உருவாகியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் இந்த முக்கியத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்படாததால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.தற்போது 8 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிலுவைத் தொகை இந்த திட்டத்தின் மீது சுமையாக அழுத்திக் கொண்டிருக்கிறது.