ஜம்முகாஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் டல் ஏரியில் (Dal lake) முதல் மிதக்கும் திரையரங்கு உருவாக்கப்பட்டுள்ளது. ஷிகாரா எனும் அலங்காரப் படகில் அமர்ந்தவாறே சுற்றுலாப் பயணிகள் திரைப்படத்தைக் கண்டுகளித்தனர்.
சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் ஆசியாவிலேயே முதன்முறையாக, இந்த மிதக்கும் திரையரங்கை ஜம்முகாஷ்மீர் சுற்றுலாத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டின் 75 வது ஆண்டு சுதந்திரதினக் கொண்டாட்டத்தையொட்டி இந்தத் திரையரங்கு பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டு முதல்காட்சி திரையிடப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான இந்திப்படங்கள் காஷ்மீரின் டல் ஏரியில் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.