புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் நவம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நவம்பர்1 ஆம் தேதி விடுதலை நாள் என்பதாலும், 2ஆம் தேதி கல்லறை தினத்தை முன்னிட்டும், 3ஆம் தேதி தீபாவளியையொட்டியும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 8ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் அரை நாள் செயல்படத் தொடங்கும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.