மாருதி சுசுகி நிறுவனத்தின் பாலினோ வகைக் கார், மோதல் சோதனையில் ஒரு நட்சத்திரத் தகுதி கூடப் பெறவில்லை.
புதிய வாகனங்களின் தரம், உறுதி, பாதுகாப்புக் கூறுகள் குறித்து ஆய்வு செய்ய வாகனங்களை சோதனை முறையில் விபத்துக்கு உட்படுத்தி, மதிப்பீடு செய்யப்படுகிறது.
இந்த ஆய்வில் ஐந்து நட்சத்திரங்கள் பெறுவது உயர்தரமாகக் கருதப்படுகிறது. லத்தீன் அமெரிக்காவுக்கான பாதுகாப்பு அமைப்பில் மாருதி சுசுகியின் பாலினோ வகைக் கார்களை மோதல் சோதனைக்கு உட்படுத்தியதில் அது ஒரு நட்சத்திரத்தைக் கூடப் பெறவில்லை.
முன்பக்கத் தாக்கத்தில், நிலையான கட்டமைப்புச் செயல்திறனைக் காட்டிய அதே சமயம் பக்கவாட்டுத் தாக்கச் சோதனையின் போது கதவில் அதிக ஊடுருவல் தன்மை உள்ளதையும், ஆட்களின் மார்புப் பகுதிக்குப் பாதுகாப்பு இல்லாததையும் காட்டியுள்ளது.
இதேபோல மாருதி சுசுகியின் ஸ்விப்ட் வகைக் காரும் சில வாரங்களுக்கு முன் மோதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது ஒரு நட்சத்திரத்தைக் கூடப் பெறவில்லை.