கர்நாடகாவில் கொரோனா தொற்றின் புதிய வைரசான AY.4.2 இதுவரை 7 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
பெங்களூருவில் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நல ஆணையர் டி ரந்தீப் செய்தியாளர்களிடம் பேசும்போது, பெங்களூருவில் 3 பேருக்கும், மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் 4 பேருக்கும் AY.4.2 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக வெளிநாட்டில் இருந்து கர்நாடகாவுக்கு வருபவர்களுக்கு, வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு பெறப்பட்ட எதிர்மறையான RT-PCR சோதனையை கட்டாயமாக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.