உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்றின் போது போடப்பட்ட 3 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு காலகட்டங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளுக்கு இணங்க, கொரோனா தொடர்பான பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளத.
இதனால் பேரழிவு மேலாண்மை சட்டம், தொற்றுநோய்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் போடப்பட்ட 3 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.