உத்தரப்பிரதேசத்தில் பூர்வாஞ்சல் எனப்படும் கிழக்கு மண்டலத்தில் 9 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
சித்தார்த்த நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்தபின் பேசிய அவர், ஏழைகளுக்கு மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பதே மத்திய அரசின் நோக்கம் என தெரிவித்தார்.
மேலும், முந்தைய அரசுகள் தங்கள் பெட்டியை நிரப்பிக் கொண்டதாகக் குற்றஞ்சாட்டிய பிரதமர், ஏழைகளின் பணத்தைச் சேமிக்கவும் அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்துகொடுக்கவும் அரசு முன்னுரிமை அளித்து வருவதாகத் குறிப்பிட்டார். , தற்போது வட இந்தியாவின் மருத்துவ மையமாகப் பூர்வாஞ்சல் உருவாக உள்ளதாக பேசினார்.