கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவில் கடந்த 15 மற்றும் 16-ந்தேதிகளில் பெய்த கன மழையால் இடுக்கி மற்றும் கோட்டயம் உள்பட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளக்காடானது.
இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.