2014ம் ஆண்டுமுதல் நாடு முழுவதும் 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத பகுதிகளில் இந்தக் கல்லூரிகள் திறக்கப்பட்டிருப்பதாகவும், அடித்தட்டு மக்கள் உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆண்டொன்றுக்கு 16 ஆயிரம் இளங்கலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் கிடைக்கும் என்றும், இதுவரை 63 கல்லூரிகள் செயல்பாட்டிற்கு வந்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.