ஆர்யன் கான் வழக்கில் திடீர் திருப்பமாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தன்னை வெற்று ஆவணத்தில் கையெழுத்திட வைத்ததாக வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.
கோவா சென்ற சொகுசுக் கப்பலில் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்த வழக்கில், தனியார் புலனாய்வாளர் கே.பி.கோசவி, அவரது உதவியாளர் பிரபாகர் உள்ளிட்டோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். சம்பவம் நடந்த அன்று, ஆர்யன் கானுடன் கோசவி செல்பி எடுத்த புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கே.பி.கோசவி சந்தேகத்திற்குரிய வகையில் மாயமாகி உள்ளதாக குறிப்பிட்ட பிரபாகர், போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குநர் சமீர் வாங்கடேவிடம் இருந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து, குற்றச்சாட்டுகளை மறுத்த சமீர் வாங்கடே, இதற்கு விரைவில் பதிலளிக்கப்படும் என குறிப்பிட்டார்.