நாட்டில் நீதித்துறை கட்டமைப்புகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பை உயர் நீதிமன்றத்தின் ஔரங்காபாத் கிளைக் கட்டடங்களைத் திறந்து வைத்து அவர் பேசினார். அப்போது, மக்களுக்கு நீதியைக் கிடைக்கச் செய்வதில் நீதித் துறை கட்டமைப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று குறிப்பிட்ட அவர், ஆனால், அத்தகைய கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் பராமரிப்பதிலும் முறையான திட்டமிடல் காணப்படவில்லை எனக் கூறினார்.
மேலும் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்தே நீதித் துறை கட்டமைப்புகளை மேம்படுத்தும் விவகாரம் முக்கியப் பிரச்னையாக உள்ளதாகவும், இந்தப் பிரச்னையை சரிசெய்ய வேண்டுமெனில், நீதித் துறைக்கு நிதி விவகாரத்தில் தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி வலியுறுத்தினார்.