உத்தரப்பிரதேசத்தில் இளைஞர்களுக்கு நவம்பர் மாத இறுதியில் இருந்து டேப்லட்கள், ஸ்மார்ட் போன்கள் மற்றும் மடிக்கணினி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
சுல்தான்பூரில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசிய அவர், பாகுபாடின்றி ஒவ்வொரு இளைஞருக்கும் வேலைவாய்ப்பை வழங்க தனது அரசு செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.
மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பெறுவதற்காக அடுத்த மாதம் முதல் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டார்.