காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிறுபான்மையினர் வசிக்கும் இடங்களில் அவர்களின் பாதுகாப்பை டிரோன்கள் வாயிலாக கண்காணிக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கடந்த சில நாட்களாக காஷ்மீரில் வெளி மாநிலத்தவர் மற்றும் சிறுபான்மை அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக டிரோன் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்படுவதாக போலீசாரும், சிஆர்பிஎப் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா முதன்முறையாக அங்கு செல்கிறார். அதற்காகவும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஸ்ரீநகரின் பிரதாப் பார்க் பகுதியில் டிரோன்கள் பறக்கவிடப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது.