சபரிமலை ஐயப்பன் கோவிலில் மெய்நிகர் வரிசையை நிர்வகிப்பதற்கு கேரள அரசு மற்றும் போலீசாருக்கு அதிகாரம் உள்ளதா என கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தரிசனத்திற்கு வரும் பக்தர்களை கேரள போலீசாரின் மெய்நிகர் மேலாண்மை அமைப்பு நிர்வகிக்கும் என்ற அறநிலையத்துறைத்தின் அறிவிப்பை எதிர்த்து தேவசம் போர்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மெய்நிகர் வரிசையை அமைக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா, கோவில் விவகாரங்களில் அரசின் பங்கு என்ன என்று கேள்வி எழுப்பினர்.
வழக்கு தொடர்பாக நவம்பர் 26-ஆம் தேதிக்குள் பதிலளிக்க கேரள அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.